தீயணைப்பு நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்..!

124

ஒட்டப்பிடாரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவில், தீயணைப்பு நிலையம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குத்து விளக்கேற்றி, தீயணைப்பு நிலையம் அருகே மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.