ஜனவரி 3ஆம் தேதி சென்னை சட்டசபை முற்றுகை என விவசாயிகள் தகவல்..!

86

ஜனவரி 3ஆம் தேதி சென்னை சட்டசபையை முற்றுகையிடுவது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாய விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் கடந்த 13 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக யாரும் வரக்கூடாது என வாகனங்களை நிறுத்தி காவல் துறை சோதனை நடத்தி வருவதால் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து புதைகுழியை தோண்டி அதற்குள் சென்று தங்கள் மேல் மண்ணால் மூடிக்கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் ஜனவரி 3ஆம் தேதியன்று சென்னையில் உள்ள சட்டசபையை முற்றுகையிடுவது என விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.