பார்மூலா கார் பந்தயம் போட்டியில் சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்..!

303

கோவையில் நடைபெற்ற பார்மூலா கார் பந்தயம் போட்டியில் சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

21வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன பந்தயம் நேற்று கோவை செட்டிப்பாளையம் பகுதியில் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை, கோவை, டெல்லி, மும்பை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற எல்.பி.ஜி. பார்மூலா 4 கார் பந்தய முதல் போட்டியில் டெல்லி வீரர் ரோகித் கன்னா முதலிடம் பிடித்தார்.

இரண்டாம் இடத்தில் சித்தேஷ் மண்டோடியும், சென்னையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதேபோன்று யூரோ ஜே.கே. 18 கார் பந்தயத்தின் முதல் போட்டியில் இலங்கை வீரர் பிரையன் பெரேரா முதல் இடத்தை பிடித்தார். மும்பை வீரர் நயன் சாட்டர்ஜி இரண்டாம் இடமும், சென்னை வீரர் அசுவின் தத்தா 3வது இடத்தை பிடித்தனர். மழை பெய்து ஓடுதளம் ஈரப்பதத்துடன் காணப்பட்ட நிலையிலும், சீறி பாய்ந்த கார்களை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.