லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது..!

124

கோவையில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத் துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிப்புதூர் பகுதியில் பன்னீர் செல்வம் என்பவர், டேங்கர் லாரிகளுக்கு அளவீடு சரிபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளுக்கு கொள்ளளவு சரிபார்த்து சான்றிதழ் அளிக்கப்படும். குறித்த அளவீடுகளில் மாற்றம் இருந்தால், அளவீடு சரிசெய்யப்பட்டு, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளால் சான்று அளிக்கப்படும். இதற்கென அரசு ஆயிரத்து, 630 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் அவ்வாறு சான்று அளிப்பதற்கு வந்த தொழிலாளர் நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன், லாரிக்கு தலா 5ஆயிரம் வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பன்னீர் செல்வம் அளித்த புகாரின்பேரில் அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், விஜயலட்சுமியை கையும் களவுமாக கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆயைணர் ராஜசேகரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.