பீகாரில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கோவையில் கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த பப்புகுமார் என்பவர் கோவை சுலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இவர், பீகாரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய போது, அதிகளவில் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாட்னா மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து, கோவை வந்த பீகார் போலீசார், பப்புகுமாரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ரயில் மூலம் அவர் பீகாருக்கு அழைத்து செல்லப்பட்டார்.