கோவையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

217

கோவையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரியா- ஆறுச்சாமி தம்பதியினர் உறவினர் குழந்தையான கன்ஷிகாவை, அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக உறவினர்கள் சிலருடன் ஆனைமலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆத்துபாலம் அருகே சென்றபோது, ஆறுச்சாமியின் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஆறுச்சாமியின் உறவினர் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு வயது குழந்தை கன்ஷிகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் மரணம் அடைந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரில், கன்ஷிகாவின் பாட்டி சக்தியம்மாளும் உயிரிழந்தார். படுகாயமடைந்த மீதமுள்ள 6 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.