கோவையில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

297

கோவையில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 நாட்களாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார். ஆனால் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எச்.ராஜா வலியுறுத்தினார்.