கோவை திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க . நிர்வாகிகள் நீக்கம்! ஜெயலலிதா அறிவிப்பு!!

510

சென்னை, ஆக 3–
அ.தி.மு.க . பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது.
கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செய்யப்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்த கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த
சிங்கைஆர்.ரங்கநாதன் ,
(சவுரிபாளையம் பகுதி செயலாளர்)
பி.ஜெயகிருஷ்ணன் (எ) போனஸ்பாபு,
(சிங்காநல்லூர் பகுதி செயலாளர் )
ஆர் மாரப்பன் எம்.சி
(சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி )
திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த
வி.எஸ்.ஆர் ஜெகதீஷ்,
(மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர்)
ஜி.டி. லாரன்ஸ்,
(பணகுடி பேரூராட்சிக் செயலாளர் பேரூராட்சி மன்றத் தலைவர்)
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்டவாறு ஜெயலலிதா அறிவிப்பில் கூறியுள்ளார்.