நீலகிரி, கோவை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

317

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்கு ஆந்திரா மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி, தேனி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.