சின்னச்சாமியை ஆகஸ்ட் 27வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..!

161

அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமியை ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான சின்னச்சாமி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அண்ணா தொழிற்சங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், கடந் பிப்ரவரி மாதம் சின்னச்சாமியை தொழிற்சங்க செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக, முதலமைச்சர் இபிஎஸ், துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, இருவரையும் துரோகிகள் என விமர்சித்த சின்னச்சாமி, தன்னை நீக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், அவர் தற்போது டிடிவி. தினகரன் அணியில் இணைந்துள்ளார்.

இதனிடையே, சின்னச்சாமியை சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, போலீஸார், சின்னச்சாமியை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், 4 பிரிவுகளின் கீழ், சின்னச்சாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை சின்னச்சாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.