கோவையில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பொதுமக்கள் மீது மோதியதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொள்ளாச்சியிலிருந்து கோவையை நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுந்தராபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. அப்போது எதிரே நின்ற ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சோமு, சுரேஷ் மற்றும் நடராஜ் ஆகிய மூன்று பேரும் அரசு பொது மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் என்பவர் மயக்கம் அடைந்தததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அவரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததில் அவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.