கோவை அருகே தனக்கு சொந்தமான 2 மாடுகளை கொன்றுவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் மீது காவல் நிலையத்தில் விவசாயி புகார் கொடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது வீட்டுக்கு அருகே வசிப்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து சுப்பையன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் சுப்பையனுக்கு சொந்தமான இரண்டு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. மது விற்பனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பக்கத்துவீட்டுக்காரர்தான் தனது மாடுகளை விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக கருமத்தம்பட்டிகாவல் நிலையத்தில் சுப்பையன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.