கொரிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை பி.வி.சிந்து, காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

215

கொரிய பேட்மிண்டன் போட்டியில் கால் இறுதிக்கு முன்றைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.
கொரியாவில் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி தகுதி சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனையான நங் யீ சூயிங்கை சந்தித்தார். இதில் சிந்து 21-13, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்றைய சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான காலிறுதி தகுதிச்சுற்றில், இந்திய வீரர் காஷ்யப், சீன தைப்பேவின் சூ ஜன் ஹோவை சந்தித்தார். இதில் காஷ்சிப் 21-13, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்றைய சுற்றுக்கு முன்னேறினார்.