கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

210

கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பானது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடங்குளம் அணு உலை 7 அடுக்கு பாதுகாப்பு கொண்டது எனவும், அதனால் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். கூடங்குளம் இரண்டாவது அணுமின் உலையில் உற்பத்தி தொடங்கி உள்ளதால், அதிக மின்சாரம் கிடைக்கும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவரை கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முறைப்படி அறிவிப்பார் எனவும், அம்மாநில காங்கிரஸ் விவகாரங்களில் நான் தலையிடுவது இல்லை எனவும் அவர் மேலும் கூறினார்.