கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியபோது கண்டெடுக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் அம்மன் சிலைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

211

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியபோது கண்டெடுக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள பெருமாள் மற்றும் அம்மன் சிலைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில ஆண்டுகளாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆற்றில் நிர்ணயம் செய்யப்பட்ட 3 அடியை விட 30 அடி ஆழமாக தோண்டி மணல் அள்ளும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பனையபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 20 அடியில் பழைய கட்டிடம் இருந்தது தென்பட்டது. இதையடுத்து உலகாண்ட கருப்பு கோவிலுக்கு தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை குழாய் போட்டபோது, பல சிலைகள் மற்றும் கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டது. தற்போது உத்தமசீலி என்ற பகுதியில் 10 அடியில் மணல் அள்ளியபோது, 4 அடி உயரமுள்ள பெருமாள் சிலையும், இரண்டாக உடைந்த நிலையில் அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.