ரயில்களின் தூரம் நீட்டிப்பு : எழும்பூர் – திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரை நீட்டிப்பு ..!

522

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்தும், தூரத்தை நீட்டித்தும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து பழனி வரை இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது கேரள மாநிலம், பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரையிலும், திருவனந்தபுரம் – பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சி, பழநி வழியாக, மதுரை வரை நீட்டித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 3 ரயில்களின் நேரம் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தஞ்சாவூர் – கும்பகோணம் பயணியர் ரயில், மயிலாடுதுறை வரையிலும், நாகூர் – திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையிலும், திருச்செந்துார் – பழநி பயணியர் ரயில், பாலக்காடு வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எழும்பூர் – மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மார்ச் மாதம் 1 முதல் பாதை மாற்றி, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக, இயக்கப்பட உள்ளது.