வெள்ள அபாயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மேலும் முக்கொம்பில் இருந்து ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் இரும்பு பாலத்தில் விரிசல் அதிகமாகியுள்ளதாகவும், பாலம் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் இரும்பு பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வெள்ள அபாயத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.