கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் : கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

170

கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட 90 ஆயிரம் கன அடி தண்ணீர் சிதம்பரம் – சீர்காழி இடையே கடலில் கலப்பதால் பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து காவிரி வழியாக திறந்து விடப்பட்ட 90 ஆயிரம் கன அடி தண்ணீர் சிதம்பரம் அருகே கொடியம்பாளையம் – பழையார் கிராமங்களுக்கு இடையே கடலில் கலக்கிறது. அதிகபடியான தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் வந்துகொண்டிருப்பதால் கரையோரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் சீர்காழி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுவதால் கால்நடைகள், உடமைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளுமாறும், தண்ணீரில் இறங்க வேண்டாமெனவும் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டது.