கொள்ளிடம் கரையோரம் பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து, கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சிதம்பரம், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதனால், திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, மடத்தாந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட இடங்களை தொழில்துறை அமைச்சர் படகு மூலம் பார்வையிட்டார். இதே போன்று, கும்பகோணம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைகண்ணு, ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பார்வையிட்டார்.

நாகை, சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அதிக அளவில் பாய்ந்தோடுவதால், முதலை மேடு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்கள் பாதிப்படைந்தன. கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகள பார்வையிட்டார்.