கொலை முயற்சியை தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரிக்கு அரிவாள் வெட்டு. மதுரையில் ரவுடிக்கும்பலை பிடிக்க துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு.

229

மதுரையில் ரவுடிகள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கீழ்மதுரை அருகேயுள்ள காமராஜபுரத்தில் முன்னாள் மண்டல செயலாளர் குருசாமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகருடன் குருசாமிக்கு இருந்த முன்பகை காரணமாக, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, இவரது வீட்டிற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் காவல்துறை ஆய்வாளர் சூரகுமார் தலைமையில், மர்ம கும்பலை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சூரகுமாரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய மர்ம கும்பலில், 3 பேரை பிடித்து துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். தப்பியோடிய மீதி 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் ரவுடிகள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.