குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

352

குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குளச்சல் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்த அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால், இந்த திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கேரள மாநிலம் விழிஞ்ஞம் என்ற இடத்தில் சர்வதேச பல்நோக்கு துறைமுகம் அமைக்கும் முயற்சியில் பினராயி விஜயன் அரசு திட்டமிட்டுள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் குளச்சல் துறைமுகம் அமைந்துள்ளதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அம்மாநில மீனவர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குளச்சல் துறைமுக திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அவரின் கோரிக்கையை
பிரதமர் மோடி திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். இரண்டு துறைமுகங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதால் திட்டத்தை ரத்து செய்யமுடியாது என பிரதமர் மோடி கூறியதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.