கோயில் விலங்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

252

கோயில் விலங்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை
விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கோயில்களில் மாடுகள், கன்றுக்குட்டிகள், யானைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் 3 கோயில் யானைகள் அடுத்தடுத்து இறந்தால் விலங்குகளைப் பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதா ராஜன் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த
தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சதீஷ் பராசரன், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, வன விலங்குகளை கோயில் நிர்வாகத்தினரால் பராமரிக்க முடியுமா என்பதை வன அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் கோயில் யானைகள் தற்போது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.


கோயில் விலங்குகள் பராமரிப்பு:

வன விலங்குகளை கோயில் நிர்வாகத்தினரால் பராமரிக்க முடியுமா? என்பதை வன அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
கோயில் யானைகள் தற்போது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவேண்டும்.
கும்பகோணம் திருவிடைமருதூர் கோயில் யானை உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.
யானை எந்த நிலையில் உள்ளது? என்பதை விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும் என்று உத்தரவு.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கும்பகோணம் திருவிடைமருதூர் கோயில் யானை உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அந்த யானை எந்த நிலையில் உள்ளது? என்பதை விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.