இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி 19-வது சதம் அடித்து சாதனை!

273

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், புஜாரா, கோலி ஆகியோரின் சதத்தால், இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
நாக்பூரில் இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்தது. இந்திய வீரர்கள் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் அடித்து அணிக்கு வலுச்சேர்த்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் புஜாரா 121 ரன்களும், கேப்டன் கோலி 54 ரன்கள் எடுத்து களத்தில் நிலைத்தனர்.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் புஜாராவும், கோலியும் தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் கோலி சதம் அடித்து அணிக்கு கூடுதல் வலுச்சேர்த்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் கோலி தனது 19-வது சதத்தை நிறைவு செய்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை, இந்திய வீரர்கள் சதுரியமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.