கோடியக்கரை பறவைகள் சரணாலய பகுதியில், கோடையிலும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

248

கோடியக்கரை பறவைகள் சரணாலய பகுதியில், கோடையிலும் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும், ஈரான், ஈராக், சைபீரியா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்கின்றன. ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வருகின்றன. மழைகாலம் தொடங்கும் அக்டோபர் மாதம்முதல் கோடைகாலம் தொடங்கும் மார்ச் மாதம்வரை பறவைகள் இங்கு தங்கி, தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வதுண்டு.
இந்நிலையில், கோடியக்கரை பகுதியில் இந்த ஆண்டு கோடை காலத்திலும் மழை பெய்த காரணத்தால், பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா உள்ளிட்ட நூற்றுகணக்கான பறவைகள்
கோடியக்கரைக்கு வந்துள்ளன. கோடை காலத்திலும் பறவைகளின் வருகையால், சரணாலயம் களை கட்டியுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.