கொட நாடு பங்களா, இளவரசியின் மகள் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு !

393

சசிகலா, தினகரன் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில் ஆயிரத்து 800 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான 180-க்கும் மேற்பட்ட இடங்களில், 12 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கோடநாடு பங்களா, நடராஜனுக்கு சொந்தமான தஞ்சாவூர் வீடு, சென்னையில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதேபோன்று, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 6 வருமான வரித்துறை ஆணையர்கள் உட்பட ஆயிரத்து 800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.