கொள்ளை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சயன், மனோஜ் | டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது

114

டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க தனிப்படை போஸீசார் திட்டமிட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தெஹல்கா பத்திரிக்கை ஆசிரியர் மேத்யூஸ், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக கூறியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிமுக சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், கூலிப்படை தலைவர் சயன், கூட்டாளி மனோஜ் மற்றும் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர். இந்த நிலையில், டெல்லியில், சயன் மற்றும் மனோஜை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இருவரும் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபடுத்த பின்னர் புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.