குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்..!

252

கொடைக்கானல் அருகே குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துபாறை கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இப்பகுதி மக்கள், வாழை, அவரை, உருளை கிழங்கு போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சில மாதங்களாக இங்கு முகாமிட்டுள்ள யானைகள், விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகின்றன. எனவே யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.