கொடைக்கானல் – மூணாறு இடையே சாலை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்-மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா!

215

கொடைக்கானல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஹெலிபேட் திட்டம் விரைவில் அமைக்கப்படும் என மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி குறித்து வனத்துறை, வருவாய் துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் மகேஷ்சர்மா ஆய்வு நடத்தினார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடைக்கானலில் இருந்து பழனிக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், கொடைக்கானலில் வாகன நெரிசலைப் போக்க புதிய இணைப்புச்சாலை மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் ஆகியவை உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும் கொடைக்கானல் – மூணாறு இடையே சாலை அமைப்பது குறித்தும் பரிசீலிக்க உள்ளதாகவும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.