கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் கன மழையால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தென் மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி, ரசித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில் குளிர் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.