கொடைக்கானலில் தொடர்ந்து இயக்கப்படும் கனரக வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

கொடைக்கானலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை இயக்கக்கூடாது என மாவட்ட முதன்மை நிர்வாகம் தடை விதித்திருந்தது. எனினும் கொடைக்கானலின் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தடையையும் மீறி கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் கனரக வாகனங்களை பயன்படுத்துவதால் நிலச்சரிவு, நில அதிர்வு போன்ற இயற்கை சீரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.