கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளிடம் போதைப் பொருட்கள் விற்பனை – கேரளா இளைஞர் கைது..!

128

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் போதை பொருட்களுடன் சுற்றித் திரிந்த கேரளாவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து. கொடைக்கானல் மற்றும் மலை நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் ஆசிஸ் ஆயில், ஆசிஸ் பவுடர், கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இவர் கேரள மாநிலத்தை சேர்ந்த நிஷாந்த் என்பது தெரியவந்தது. போதை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார் நிஷாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.