கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது….

181

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சென்னையை சேர்ந்த சுதாகர் என்றும், சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சுதாகரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.