கொடைக்கானலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றதில், மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

245

கொடைக்கானலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றதில், மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் வடவட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். கொடைக்கானல், கோக்கேர்ஸ் வாக் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இவர்கள், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது. இதில், மனைவி கவுசல்யா, மகள்கள் ஜனனி, இனியா ஆகியோர் உயிரிழந்தனர்.
இது குறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த கொடைக்கானல் போலீசார் உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டனர். உயிரிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுப்ரமணி, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.