கொடைக்கானல் அருகே இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

252

கொடைக்கானல் அருகே இரு சக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்த மூஞ்சிக்கல்லில் இரு சக்கர வாகனமும், எதிரேவந்த காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் மார்ட்டின், பிரபஞ்சன், ஹரிஹரன் ஆகிய மூவரும் தூக்கி எறியப்பட்டு ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளனர். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மூவரும் தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மூஞ்சிக்கல்லில் சாலை விரிவாக்கபணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறையினர், அதற்கான வாகனங்கள் அனைத்தையும் சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு செல்வதே இவ்வகையான விபத்துகளுக்கு காரணம் என்றும், இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.