இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக கொச்சிக்கு அழைத்து சென்று தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

256

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக கொச்சிக்கு அழைத்து சென்று தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த புகார் தொடர்பாக டி.டி.வி. தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நான்கு நாட்கள் டெல்லியில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, சென்னை அழைத்து வரப்பட்ட தினகரனை மத்திய அரசுக்கு சொந்தமான ராஜாஜி பவனில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், அடையாறில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட தினகரனிடம் அங்கு வைத்து விசாரணை நடத்தினர். இதேபோன்று, தினகரனின் மனைவி அனுராதா மற்றும் நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இருவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இரண்டாவது நாளான நேற்று கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பிலிப் டேனியல், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோரிடம் ராஜாஜி பவனில் வைத்து டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தினகரனுடன் உள்ள தொடர்பு குறித்து அவர்களிடம் கேள்விகள் கேட்டனர். இதையடுத்து, திருவேற்காட்டைச் சேர்ந்த கோபி என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே, ஹவாலா பணம் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் கொச்சிக்கு தினகரனை இன்று அழைத்து செல்ல டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.