திருவனந்தபுரம், கொச்சி விமான நிலைய இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

132

இந்தியாவில் உள்ள 148 விமான நிலைய இணைய தளங்களுக்குள் ஊடுருவி, உளவுத் தகவல்களை சில வெளிநாட்டு கும்பல் திருடி வருகின்றனர். காஷ்மீர் சிறுத்தைகள் என்ற போர்வையில், பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள், இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களுக்கு சொந்தமான இணைய தளங்களுக்குள் ஊடுருவி தகவல்களை திருடி வருகின்றனர்.இந்நிலையில், கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள விமானநிலைய இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியதாக தெரியவந்துள்ளது. இதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளங்களுக்குள்ளும் ஊடுருவி ரகசியங்களை அறிந்துகொண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே நாட்டின் பாதுகாப்பு கருதி, சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டும் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.