கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 930 கிராம் தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

158

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 930 கிராம் தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை சேர்ந்த சல்மான் ஷாரிப் என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், ஷார்ஜாவிலிருந்து தங்க கட்டிகள் கடத்தியது தெரியவந்தது. 930 கிராம் மதிப்புள்ள 8 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதன் மதிப்பு 26 லட்சம் ரூபாய் என தெரிவித்தனர். இதனையடுத்து கடத்தவரப்பட்டவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.