புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

426

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண் பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே கடும் மோதல்கள் இருந்து வருகின்றன. மாநில உரிமைகளில் கிரண் பேடி தலையிடுகிறார் என்பது முதலமைச்சர் நாராயணசாமியின் முக்கிய குற்றச்சாட்டாகும். இதனிடையே, தனது செயல்பாடுகள், மேலும் பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடியின் ட்விட்டர் கணக்கை 11 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, கிரண் பேடி வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.