சொகுசு காரை பதிவு செய்து வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது விரைவில் நடவடிக்கை : புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடி உத்தரவு..!

639

புதுச்சேரியில் சொகுசு காரை பதிவு செய்து வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை அமலா பால் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு புதிய பென்ஸ் கார் வாங்கியுள்ளார்.
ஆனால் அந்த காரை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கேரளாவின் கொச்சி நகரில் நிரந்தர முகவரி கொண்டுள்ள அமலா பால், புதுச்சேரியில் நிரந்தர முகவரி இருப்பதாக கூறி காரை பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமலாபால் கார் விவகாரம் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்ற மாநிலத்தவர்கள் புதுச்சேரியில் வாகனப் பதிவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.