ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்காதது ஏன் என்று புதுவை துணை நிலை ஆளுனர் …

162

ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்காதது ஏன் என்று புதுவை துணை நிலை ஆளுனர் கிரண் பேடி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
சட்டத்தின் அடிப்படையில் தனக்கு கொடுத்த அதிகாரத்தின் படி தான் செயல்பட்டு வருவதாகவும், தன்னுடைய அதிகார எல்லையை ஒருபோதும் மீறவில்லை என்றும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், நியாமன எம்ஏல்ஏக்களை புதுவை அரசு ஏன் நியமிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய கிரண் பேடி, சட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்று உறுதிபட தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது தான் என்றும், மாநில பாடத்திட்டம் அல்லது சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் என எந்த வழியில் கல்வி பயின்றாலும், நீட் தேர்வின் விதிமுறைகளை கடைபிடித்து அதில் தேர்ச்சி பெற்று தான் மருத்துவராக வேண்டும் என்று அவர் கூறினார்.