ஒரு நாள் சம்பளத்தைக் கேரளாவுக்கு அளித்து உதவுங்கள் – ஆளுநர் கிரண் பேடி

1013

ஒரு நாள் சம்பளத்தைக் கேரளாவுக்கு அளித்து உதவுங்கள் என இந்திய மக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார். கேரள மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டுவர அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.