முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு கிரண்பேடி தக்க பதிலடி..!

341

அதிகாரமில்லாத ஆளுனர் என்ற முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு கிரண்பேடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுனர் கிரண்பேடி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளை கிரண்பேடி மிரட்டுவதாக கூறிய அவர், கிரண்பேடி உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதுச்சேரி முன்னேற விரும்பினால் முதலமைச்சர் நாராயணசாமி, தன்னைப் பற்றி விமர்சிக்கக்கூடாது என்றும், ஆளுநர் மாளிகையின் அதிகாரங்களை குறைத்து மதிப்பீடு செய்வதால் மாநில வளர்ச்சி வேகம் குறையும் என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.