வரும் 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

216

வரும் 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், இந்திய விண்வெளி ஆய்வு மையம் இதுவரை 38 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக கூறினார். மேலும் மாணவர்கள் கேள்வி கேட்கும் தன்மையை இழந்து விடக்கூடாது என்றும், அப்போது தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும் என்று அறிவுறுத்தினார். வரும் 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான்-2 செயற்கைகோள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் கிரண்குமார் தெரிவித்தார். இந்த கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.