கிரண்பேடியின் இரண்டு ஆண்டு கால பணிகள் புத்தகமக தொகுக்கப்பட்டு கவர்னர் மாளிகையில் வெளியிடு

234

கிரண்பேடியின் இரண்டு ஆண்டு கால பணிகள் புத்தகமக தொகுக்கப்பட்டு கவர்னர் மாளிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி கடந்த 2016-ம் ஆண்டு 29-ந்தேதி பதவியேற்றார். அவர் கவர்னராக பொறுப்பேற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதையொட்டி, கவர்னர் வார இறுதிநாட்களில் ஆய்வுக்கு செல்லும் செய்திகள், படங்கள் மற்றும் கவர்னர் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தொகுத்து புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை கவர்னர் மாளிகையில் மூத்த பத்திரிக்கையாளர்கள் வெளியிட்டனர். மேலும், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் காணொலி மூலம் திரையிடப்பட்டது. இதில் கிரண்பேடியின் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.