வேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார் கிரண்பேடி..!

146

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, வேல்ராம்பட்டு ஏரி பகுதிகளை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பசுமை புதுச்சேரி என்ற திட்டத்தின் கீழ், அனைத்து ஏரிகளிலும் ஆய்வு செய்து வருகிறார். இதன்படி இன்று வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அங்கு மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வு பணிகளில் ஆளுநர் கிரண்பேடியோடு, ராஜ் நிவாஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.