அரசு நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை..!

212

உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்த பிறகே கருத்து கூற முடியும் என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கிரண்பேடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரி அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதிகள் நீக்கினர். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்து அறியாமல் தம்மால், கருத்து கூற முடியாது என்றார். மேலும் மக்கள் நலனில் தான் தமக்கு முன்னுரிமை என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.