புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..!

246

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். அவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்முகத்துடன் வரவேற்றார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி ஆளுனர் மாளிகையில், தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆட்சி அதிகாரத்தில் எதிரும், புதிருமாக இருந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமியை இன்முகத்துடன் வரவேற்றார். பின்னர் இருவரும் கைக்குலுக்கிக் கொண்டனர்.

தேநீர் விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் கொடுத்து கிரண்பேடி கவுரப்படுத்தினார். இந்த விருந்தில் எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, அதிமுக மற்றும் என்.ஆர்.எஸ் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.