வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் ..!

1012

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன், அவ்வப்போது அணு சோதனை மற்றும் ஏவுகணை சோதனையையும் மேற்கொண்டு வந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது.இதனிடையே அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திக்க உள்ள கிம் சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற கிம் இதுவரை தனது நாட்டை விட்டு வெளியேறவில்லை. இந்நிலையில் முதன் முறையாக அவர் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.