பிரதமர் மோடியை கொல்ல சதி? – புரட்சிகர எழுத்தாளர்கள் 5 பேர் கைது

339

பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய, மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக புரட்சிக எழுத்தாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகான் மாவட்டத்தில், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறையில், பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களின் வீடுகளில் சிக்கிய கடிதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அதில் ஒரு கடிதத்தில் ”ஆர்” என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும். இந்த சங்கேத மொழியானது முன்னாள் பிரதமர் ராஜிவ் பாணியில் மனித வெடிகுண்டு மூலம் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியிருந்ததாக புனே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தி நிலையில் இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி புரட்சிகர எழுத்தாளர் வராவர ராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் புனே போலீசார் நம்பள்ளி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாளை அவர்கள் புனே கொண்டு செல்லப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.