கரூர் அருகே 50 லட்சம் ரூபாய் கேட்டு தனியார் நிறுவன காவலாளிகளை கடத்திய கும்பலில் ஒரு பிரிவை திண்டுக்கல் அருகே போலீசார் கைது செய்துள்ளனர்.

314

கரூர் அருகே 50 லட்சம் ரூபாய் கேட்டு தனியார் நிறுவன காவலாளிகளை கடத்திய கும்பலில் ஒரு பிரிவை திண்டுக்கல் அருகே போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் அருகே வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் பால் பண்ணை மற்றும் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை, இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து விட்டுள், வீட்டில் நுழைய முயன்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில், ஈடுபட்டிருந்த அழகுராஜ், சுவாமிநாதன, கந்தசாமி ஆகிய மூன்று பேரும் மர்மநபர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் 3 பேரின் கை,கால்களை கட்டிப்போட்டு, கடத்தி சென்றனர். பின்னர் நிறுவன அதிபரை தொடர்பு கொண்ட அவர்கள், 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் காவலாளிகளை விடுவிக்க முடியும் என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கருப்பண்ணன் அளித்த புகாரின் பேரில், தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் அருகே, காரில் வந்த கடத்தல் கும்பலின் ஒரு பிரிவை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.